All lower courts in Tamil Nadu and Pondicherry allowed to function in full from January 18!

Advertisment

கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, காணொளிக் காட்சி மூலம், அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தொற்றுப் பரவல் குறைந்து வந்ததை அடுத்து, கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களையும், ஜனவரி 18-ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் காணொளிக் காட்சி விசாரணையை அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்படத் துவங்கியுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, முழு அளவில் கீழமை நீதிமன்றங்களை அனுமதிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தங்கள் கருத்துகளை டிசம்பர் 23 -ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.