All India University Women's Football Tournament Annamalai University Bronze Medal

அகில இந்தியப்பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிர் கால்பந்து போட்டிகள் மேற்கு வங்க மாநிலம் மிட்நாபூரில் வித்யா சாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கு பெற்றன. தென்மண்டலம் சாம்பியனான அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி பங்கு பெற்று 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றது. இதன்மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணியினர் அடுத்த மாதம் அஸாமில் நடைபெற உள்ள 4வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்குத்தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற பெண்கள் கால்பந்து அணியினரைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் பல்கலைக்கழகத்தில் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். முன்னதாக கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் தொடர்ந்து 5வது முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி தங்கப் பதக்கம் பெற்றது.

வெற்றி பெற்ற அணியினரைச் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்சிவக்குமார் உள்ளிட்டவர்களுக்கும் பாராட்டுகளைத்தெரிவித்தார். இந்நிகழ்வில் உடற்கல்வி துறைத்தலைவர் இராஜசேகரன், கல்விப்புல முதன்மையர் குலசேகர பெருமாள்மற்றும் உடற்கல்வி துறை இணை இயக்குநர் வெங்கடாசலபதி உடனிருந்தனர்.