/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a986_0.jpg)
மதுவுக்கு அடிமையான மகனை தந்தையே அருவாமனையால் வெட்டி கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான இவர் ஓய்வூதியத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார். மருத்துவச் செலவிற்காகவும் அந்த தொகையை பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் சுப்ரமணியன் என்ற திருமணமாகாத அவருடைய மகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் மது அருந்த பணம் வேண்டுமென தந்தை ராமசாமியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் சுப்ரமணியனை கட்டை மட்டும் அருவாமனையால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் தந்தை ராமசாமியை கைது செய்துள்ளனர். குடிக்கு அடிமையான மகனை தந்தையே அருவாமனையால் வெட்டி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)