Skip to main content

தீயணைப்பு வாகனத்தின் மீது முகமூடியுடன் அஜித்... குவிந்த ரசிகர்கள்

 

Ajith with a mask on the fire engine... fans gathered

 

அஜித், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ளிட்ட சில நகரங்களில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இப்படம்  அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் கலந்து கொண்ட நிலையில் அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். சென்னை அண்ணா சாலை அருகே உள்ள எல்ஐசியில் இன்று காலை துணிவு படத்தின் சூட்டிங் நடைபெற்றது. இதில் நடிகர் அஜீத்குமார், நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். அசோக் லேலண்ட் வாகனத்தின் மீது இருவரும் முகமூடி அணிந்து கொண்டு அமர்ந்திருந்தனர். அந்த வாகனத்தின் கீழ் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என எழுதப்பட்டிருந்தது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !