AIADMK MLA issue -Audio Black-Mail!

பெண் விஷயத்தில் ‘துள்ளிஓடும் ராஜாவாக’ செயல்பட்டதன் விளைவாக, கடந்த ஒருமாத காலமாக பெண்ணொருவரால் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டப்பட்டு வருகிறார்.

Advertisment

என்ன வில்லங்க விவகாரம் இது?

அந்த எம்.எல்.ஏ., பெண் ஒருவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த உரிமையில் ’20 வயதில் எனக்கு மூன்று இளம்பெண்கள் வேண்டும்..’ என்று வலுவான கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். அதற்கு தொடர்பில் இருந்த பெண்ணோ, ‘ஒரே நேரத்தில் மூன்று பெண்களா? நாங்கதான் இருக்கிறோமே? ஏன் இப்படி கேட்கிறீங்க? வேண்டுமென்றால் அவரிடம் சொல்கிறேன் என வேறு ஒரு பெண்ணின் பெயரை சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் உங்களிடம் பேச விரும்புகிறார். அவள் மூலம் வேண்டுமானால் ஏற்பாடு செய்யலாம்.’ என்று கூறியிருக்கிறார்.

Advertisment

அந்த ஒரு சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய கணவன் வேறு பிரிவைச் சேர்ந்தவர். இந்த விபரமெல்லாம் அறிந்த அந்த எம்.எல்.ஏ., அவரை கைப்பேசியில் தொடர்புகொண்டு, தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அந்த வேண்டுகோள், அவரது குரலிலேயே ‘ரெகார்ட்’ செய்யப்பட்டிருக்கிறது. பிறகென்ன? ‘ரூ.25 லட்சம் கொடு. இல்லையென்றால், ஆடியோ ரிலீஸாகிவிடும். உன் மானம் சந்திசிரிக்கும்.’ என்று தொடர்ந்து ‘பிளாக்-மெயில்’ செய்துவருகிறார்.

அந்த எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டு மிரட்டல் குறித்து நாம் கேட்க, “அப்படியெல்லாம் எதுவுமில்லை. நீங்க நேரில் வாங்க.” என்று அவர் கூற, “நேரில் எதற்கு? விளக்கத்தை கைபேசி தொடர்பில் இருக்கும்போதே தெரிவிக்கலாமே?’ என்று நாம் தெரிவிக்க, “இருங்க வர்றேன். பழையபடி கூப்பிடுகிறேன்.” என்று லைனைத் துண்டித்தார். அடுத்து அந்த எம்.எல்.ஏ. நமது லைனுக்கே வரவில்லை.

‘உணர்ச்சிக்கு ஆசைப்பட்டால் அதில் ஒரு துளி சுகமும் இல்லை!’ என்பதை அந்த எம்.எல்.ஏ. இப்போதாவது உணர்ந்திருப்பாரா?