/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/26_21.jpg)
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு இடங்களுக்கு சென்று பரப்புரை செய்து வருகிறார். ஆளும் மற்றும் திமுக கட்சிகளை அவர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதனிடையே ட்விட்டரிலும் பரப்புரைக்கு இடையிடையே கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு நடிகர் கமல் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், " விஸ்வரூபம் படத்தின் போது என்னை நடுத்தெருவில் நிறுத்த அதிமுக அரசு முயன்றது. எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த நிலை அப்போது ஏற்பட்டிருக்காது" என்று வேதனையுடன் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)