after rajinikanth meet tamilaruvi manian press meet at poes garden

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தியும் கலந்து கொண்டார்.

Advertisment

ஆலோசனை பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன், "கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். கட்சியின் பெயர், சின்னம் உள்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார். மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பார் ரஜினிகாந்த். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆன்மீக அரசியல் என்பதை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி.

Advertisment

முதல்வர் வேட்பாளர் பற்றி, ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது. தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும். பாதிப்பில்லை என அரசியல் கட்சிகள் கூறுவதே அவர்களுக்கு பாதிப்பு இருப்பதை காட்டுகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ரஜினி கட்சியைத் தொடங்கியவுடன் பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள். ரஜினி வந்ததும் வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவது தான் அதிசயம், அற்புதம்.

புரிதல் இல்லாமல் இருந்தபோது ரஜினியை விமர்சித்தேன்; பிறகு அவரை பற்றி புரிந்தபோது மாற்றிக்கொண்டேன். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு எனது காந்திய மக்கள் இயக்கத்தை அதனுடன் இணைப்பேன்" இவ்வாறு அவர் கூறினார்.