Skip to main content

நிச்சயம் முடிந்த காதல் ஜோடி... ஆபிசுக்கு லீவு போட்டு காதலனுடன் சென்ற பெண்... நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சென்னை ஆவடி அருகே நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி செல்பி மோகத்தில் கிணற்றில் தவறி விழுந்ததில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இரு வீட்டாரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆவடிக்கு அருகே பட்டாபிராம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு உட்பட்ட காந்திநகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மெர்சி ஸ்டெஃபி‌. இவர் சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகேயுள்ள நவஜீவன் நகரில் அப்பு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். 

 

incidentஇருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக பழகி வந்தனர். பின்பு இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதலிப்பதை அறிந்த இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மெர்ஸி ஸ்டெபி என்ற பெண்ணுக்கும் அப்பு என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன்பிறகு காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று இருவரும் ஒன்றாக வெளியே போவதற்காக மெர்சி ஆபீஸ்க்கு லீவு போட்டுள்ளார். பின்னர் இருவரும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்தில் தனிமையில் சந்தித்திருக்கின்றனர்.


பின்பு கிணற்றிற்கு அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது நிலைத்தடுமாறி  மெர்சி ஸ்டெஃபி‌ கிணற்றில் விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற போது அப்புவும் கிணற்றுக்குள் விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் அப்பு சத்தம் போட்டுள்ளார். அவரது குரல் கேட்டு வந்த நில உரிமையாளர் சடகோபன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்புவை போராடி மீட்டுள்ளார். அவரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் கிணற்றில் சிக்கியிருந்த மெர்ஸி ஸ்டெபியை சடலமாக மீட்டனர். பின்னர் உடல் ஆவடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. திருமணம் நிச்சயமான ஒரு வாரத்தில் செல்பி மோகத்தில் மெர்சி ஸ்டெபி உயிரிழந்தது பட்டாபிராம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த சோகம்; உ.பியில் வன்முறை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tragedy befell a listed youth in custody in uttar pradesh

போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞரை போலீசார் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவரை திருட்டு வழக்கில் போலீசார் கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர். மேலும், ஆகாஷ் பிடியில் இருந்த இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

போலீஸ் காவலில் இருந்த ஆகாஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், அவரை கடந்த 21ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷை போலீசார் சித்ரவதை செய்ததால்தான் அவர் உயிரிழந்தார் என்று ஆகாஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில், ஆகாஷின் உடலை போலீசார் கைப்பற்றி அவரது வீட்டிற்கு கொண்டு சென்றபோது, ஆகாஷின் உறவினர்கள் போலீசாரைத் தாக்கி அவர்களுடைய வாகனத்திற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ஆகாஷின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையும், பிற விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினர். போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர்; திருமண ஊர்வலத்தில் கொடூரச் செயல்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Atrocity in wedding procession in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் மதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாமா கவுதம் (24). இந்த இளைஞருக்கு அம்மாவட்டத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. அதன்படி, துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் அவர்கள் இருவருக்கும் திருமண விழா நடைபெற்றது.

அந்த விழாவையொட்டி, மணமகன் சுதாமா கவுதம், குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அங்கு வந்தவர்கள், இளைஞர் சுதாமா கவுதம் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆசிட் ஊற்றியதில், சுதாமா கவுதமும், அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மணமகன் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், சுதாமா மீது ஆசிட் ஊற்றி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, தப்பிச் சென்ற 3 நபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 3 பேரில் ஒருவரான சச்சின் பிண்ட் (23) என்ற வாலிபர், சுதாமாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சச்சின், இந்தத் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.