Skip to main content

சி.எஸ்.கே அணி வெற்றி; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

After CSK's victory, young man showed his respect and paid his dues to God

 

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட ரசிகர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

ஐபிஎல் தொடரில் 16வது சீசனுக்கான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதி போட்டி நடைபெறும் என உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டு கிரிக்கெட் ரசிகர்களின் சந்தோஷத்திற்கு ஒரு நாள் முட்டுக்கட்டை போட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவார் என பேசப்பட்டதால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்களை செய்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன் தேவை என்கிற உச்சபட்ச பரபரப்புக்கு மத்தியில் சிக்ஸர், ஃபோர் என அடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார் ஜடேஜா. இந்த வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

After CSK's victory, young man showed his respect and paid his dues to God

 

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இளந்தமிழன் என்கிற இளைஞர் தோனியும் சென்னை அணியும் வெற்றி பெற வேண்டும் என வேண்டி உள்ளூர் மாரியம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து 12 அடி நீளம் கொண்ட அலகு குத்தி கவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். இது குறித்து இளந்தமிழன் கூறுகையில், “2011 இல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை பெற்று தந்தபோதே தோனி மீது எனக்கு அளப்பரிய ஆர்வம் வந்தது. அவர் கலந்து கொள்ளும் மேட்சை நான் மறக்காமல் பார்ப்பேன். இது இறுதி ஆண்டாக இருக்கும் என பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி இருக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும், இந்த முறை சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுதலாக இருந்தது. சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டேன் சென்னை அணி வெற்றி பெற்றதும் அந்த கடனை தீர்த்து இருக்கிறேன்" என்கிறார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிரட்டிய மேக்ஸ்வெல்! மெர்சல் ஆன இந்திய பவுலர்கள்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான மூன்றாவது டி20 கவுகாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 24/2 என்ற நிலையில் கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார். ருதுராஜ் ஒரு முனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் சூரியகுமார் வழக்கம்போல தனது அதிரடியை காட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்காமல், கேப்டன் சூர்யகுமார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

தொடர்ந்து திலக் வர்மா ருதுராஜ் இணை ஆரம்பத்தில் சற்று பொறுமையாக ஆடியது. பின்னர் தனது அதிரடி துவங்கிய ருத்ராஜ் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் ருத்ர தாண்டவம் ஆடினார். திலக் வர்மா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ருதுராஜ் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் முதல் டி20 சதமாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்தார். மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில்  ஒருவரான ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஆவேசமாக ஆடத் தொடங்கினார். ஆவேஸ் கான், ஹெட்டை 35 ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த இங்கிலீஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இணை ஓரளவு நிலைத்து ஆட, ஸ்டாய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். பின்னர் இணைந்த வேட், மேக்ஸ்வெல் இணை சிறப்பாக ஆடியது. பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தும் பயனளிக்கவில்லை. 47 பந்துகளில் சதம் கடந்த மேக்ஸ்வெல், ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து வெற்றி தேடித் தந்தார். 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வேட் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

- வெ.அருண்குமார்  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மும்பை அணியில் இணைந்த புதிய ஆல் ரவுண்டர் ; அடுத்த பொல்லார்டா?

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

A new all-rounder joined the Mumbai team

 

ஐபிஎல் 2024 போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான 2024 ஆம் ஆண்டின் வீரர்கள் ஏலமானது டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரேட் முறையில் ஒரு புதிய வீரர் இணைந்துள்ளார். ஐபிஎல் இல் டிரேட் எனும் முறை மூலம் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு வீரர்கள் மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் முறையில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் ரோமரியோ ஷெஃபர்ட் வாங்கப்பட்டுள்ளார்.

 

மும்பை இந்தியன்ஸ் அணி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இவர், வளர்ந்து வரும் ஆல் ரவுண்டராக பார்க்கப்படுகிறார். லக்னோ அணிக்காக 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ஏலத்தில் எடுக்கப் பட்ட 50 லட்ச ரூபாய் தொகைக்கே மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

 

இவர் சன் ரைசர்ஸ் அணிக்காக 2022 இல் ஐபிஎல் போட்டிகளில் முதன் முதலில் களம் இறங்கினார். 2023 ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பு லக்னோ அணியால் டிரேட் செய்யப்பட்டார். தற்போது மும்பை அணியால் டிரேட் செய்யப்பட்டுள்ளார். 28 வயதாகும் இவர், T20 போட்டிகளில் 99 போட்டிகளில் 109 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 150+ ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். இவர் மும்பை அணியின் பொல்லார்டுக்கு சிறந்த மாற்றாக இருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கருத்து பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு மாற்றாக எந்த வீரரை டிரேட் முறையில் லக்னோ அணிக்கு மும்பை வழங்கப்போகிறது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

- வெ.அருண்குமார்

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்