Skip to main content

“முதல்வரைச் சந்திக்க ஆலோசனை” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

“Advice to meet the Prime Minister” - Premalatha Vijayakanth

 

கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சொல்லி அந்த மாநில அரசு தண்ணீர் திறக்க மறுத்துவந்தது. இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் விவசாயிகள், கன்னட அமைப்புகள், நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதேபோல், நடிகர்கள் சார்பில் அந்த மாநிலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் எத்தனையோ கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இருந்தாலும், அனைவரும் ஒன்று கூடி அவர்கள் மாநிலத்திற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஏன் அந்த ஒற்றுமை தமிழ்நாட்டில் இல்லை. இன்று கர்நாடகாவில் நடிகர் சிவ ராஜ்குமார் தலைமையில் நடிகர்களெல்லாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, கர்நாடகா தண்ணீர் வழங்காததைக் கண்டித்து ஒட்டுமொத்த நடிகர்களை அழைத்து உண்ணாவிரதம் இருந்தார்.

 

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. காவிரி பிரச்சனையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. இந்தப் பிரச்சனை தீர்வதற்கு நதிகளை இணைப்பதே தீர்வாக அமையும். காவிரி விவகாரத்தில் முதலமைச்சரை சந்திப்பது குறித்து தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” - விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Premalatha Vijayakanth on Vijayakanth's health No one should believe rumours” -

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் அதனால் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” - அமைச்சர் துரைமுருகன்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Karnataka government not respecting Supreme Court order is not good for democracy says Minister Duraimurugan

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொளி வாயிலாக நேற்று (30.10.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம், தலைமை பொறியாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு கர்நாடகா 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமை தாங்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறையின் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு நேற்று பிறப்பித்த பரிந்துரைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் உத்தரவாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “நவம்பர் மாதம் கர்நாடக அரசு தர வேண்டிய நீரின் அளவு 16.44 டி.எம்.சி. தண்ணீர். இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்ததில்லை. ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். நாம் ஏதோ சலுகை கேட்பதாக நினைக்கிறார்கள்.

 

Karnataka government not respecting Supreme Court order is not good for democracy says Minister Duraimurugan

 

இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படி தான் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நடக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசே இந்த உத்தரவை மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்த விவகாரத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்