Skip to main content

அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி கைது!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

admk social media it wing pollachi secretary incident

 

அமைச்சர் துரை முருகனை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற  நீர்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றும் போது, “என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப் போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு எனக்கென்று எடுக்கிற சமாதியில், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்என்று ஒரு வரி எழுதினால் போதும். என் தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று பேசி இருந்தார்.

 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் அமைச்சர் துரை முருகனின் புகைப்படத்தை கல்லறையில் உள்ளது போன்று தவறாக சித்தரித்ததுடன்  சில வாசகங்களையும் குறிப்பிட்டு அவதூறாகப் பரப்பி உள்ளனர். இதனைக் கண்ட வேலூர் மாவட்ட திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்  இவ்வாறு அவதூறு பரப்பியது பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக சமூக வலைத்தளப் பிரிவைச் சேர்ந்த 20வது அணி செயலாளர் அருண்குமார் என்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ; கையும் களவுமாக கைது செய்த போலீஸ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
VAO arrested for taking Rs 1000 lakh from agricultural labourer

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி(51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி, மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் கிராமத்தில் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்ச ரூபாய்க்கு கடந்த 21.2.2024 அன்று வாங்கியிருக்கிறார்.

இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மற்றும் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளது. அதன் பேரில் சமுத்திரம் வி.ஏ.ஓ. கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் வி.ஏ.ஓ.வாக உள்ள சிவ செல்வகுமார்(41) என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். 

அதன் பேரில் வையாபுரி கடந்த 1.3.2024 மதியம் பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சிவ செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வி.ஏ.ஓ செல்வகுமார் தனக்குத் தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர்மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், வி.ஏ.ஓ சிவ செல்வகுமார் தான் கூறிய தொகையில் பாதியை குறைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.  

லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று (5.3.2024) மதியம் 12 மணியளவில் சமுத்திரம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று, சிவ செல்வகுமார் வையாபுரியிடமிருந்து 1000 ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் புகழ்ந்தார்? - ராஜேந்திரபாலாஜியின் விளக்கம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Rajendra Balaji explains why PM Modi praised MGR and Jayalalithaa

விருதுநகரில் திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட  அதிமுக சார்பில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி,  மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.   

கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது “கிராமங்களில்கூட போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் போதைக் கலாச்சாரம்  பரவிவிட்டது. கடந்த சில நாள்களுக்குமுன், சென்னையில் இருந்து வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்  பொருட்கள் பிடிபட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக், ரூ.2000 கோடிக்கு மேல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து போதைப் பொருள்களை இங்கு கொண்டுவந்துள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் விதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  

தமிழ்நாட்டின் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றிபெறச் செய்யவேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால்தான், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை, பாலாறு முல்லைப் பெரியாறு பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்.  விருதுநகர் மாவட்டத்தில் 24  ஏக்கரில்,  ரூபாய் 385 கோடி செலவில், அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி காமராஜரின் கனவை நனவாக்கியவர் ஈ.பி.எஸ். அதிமுக கட்சியை ஈ.பி.எஸ். வலுவாக வைத்திருக்கிறார். அதனால்தான், அதிமுகவை அனைத்துக் கட்சிகளும் தேடி வருகிறது.   

தற்போது  திமுக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. அதுவும் ஈ.பி.எஸ். வற்புறுத்தியதால்தான் தமிழக மக்களுக்குக் கிடைத்தது. பொங்கலுக்கு ரூ.5000 தரவேண்டுமென்று ஈ.பி.எஸ். சொல்லியிருந்தால், ஈ.பி.எஸ்.ஸுக்கு பயந்து ரூ. 5000 கொடுத்திருப்பார்கள். தற்போது ஈ.பி.எஸ். பேசுவதால்தான், தமிழக மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. 

எல்லோருக்கும் உதவும் எண்ணம் இயல்பாகவே வர வேண்டும். அதனால்தான் மறைந்து 36 ஆண்டுகள் ஆகியும் எம்.ஜி.ஆரை தெய்வமாகப் போற்றி வருகிறார்கள். அதனால்தான், பல்லடம் பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்தது  என்று பெருமையாகக் கூறினார். டெல்லியில் ஈ.பி.எஸ். கை ஓங்கினால்தான், தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கமுடியும்.” என்றார்.   

அதிமுக வாக்குகளைக் கவர்வதற்காக பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவரும்  நிலையில், விளக்கம் அளித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.