/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CFzcvzczx.jpg)
நேர்மறையான விஷயத்திலும், எதிர்மறையான அரசியல் செய்வது அரசியல் தலைவர்களுக்கு வாடிக்கையாகிப்போனது.
தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை, 29-ஆம் தேதி தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று (அக்டோபர் 30) அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஒப்புதல் வழங்காமலே, உள்ஒதுக்கீடு மசோதாவை அரசாணையாக வெளியிட்டது, தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை என்று ஆளும்கட்சியினர் பெருமிதப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘திமுக முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, அதிமுக அரசு தற்போதாவது இறங்கிவந்து ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வழக்கம்போல் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி தரும்விதத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வரைப் புகழ்ந்தும், எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்தும், வசன நடையில் கவிதை வெளியிட்டுள்ளார்.
‘அரசுப்பள்ளி
மாணவர்களின் மருத்துவர்
கனவை நனவாக்க 7.5%
உள் ஒதுக்கீடு அரசாணை
வெளியிட்டார்
எடப்பாடியார் நேற்று!
ஆளுநர் தவிர்க்க
முடியாமல் ஒப்புதல்
வழங்கினார்
இன்று!
ஏழை மாணவர்களின்
மருத்துவர் கனவு
நனவாகப்போவது
நாளை!
இதிலும் உழைப்பில்லா
உரிமை கோரும்
மு.க.ஸ்டாலினை இனியும்
தமிழகம் ஏற்காது!’
எனப் ‘பஞ்ச்’ விட்டுள்ளார்
தமிழகத்தில் இந்த அக்கப்போர் அரசியல் ஓயாது போலும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)