Skip to main content

ஆய்வின்போது செருப்பை கையில் தூக்கியபடி நடந்த ஓ.பி.எஸ்.!-ஆற்றின் புனிதம் காப்பது இயல்பாம்!  

Published on 01/11/2020 | Edited on 01/11/2020

 

சில நேரங்களில் சில தலைவர்களின் பண்பு வியப்புக்குரியதாக இருக்கும்.  அப்படித்தான், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயலொன்று, பலரையும் வியக்க வைத்துள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள மலைகிராமம் மேலப்பரவு. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியைச் சுற்றிலும்,  நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்தப் பகுதியின் குறுக்கே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், குரங்கணி கொட்டகுடி ஆறு செல்வதால், மழைக்காலங்களிலும், பருவ மழைக் காலங்களிலும். ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடும். 

இந்தச் சூழ்நிலையில், இங்குள்ள மக்களும், விவசாயிகளும், விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆற்றைக் கடக்க முடியாமலும், இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அம்மக்கள் வசிக்கின்ற வீடுகளும் மிகவும் சேதமடைந்துள்ளன.

இங்குள்ள மலைவாழ் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிவதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதிக்குச் சென்றார். அங்கு வசிக்கும் 50 குடும்பங்களுக்கு, உடனடியாக புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடித்திட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஓ.பி.எஸ்., ஆய்வுக்காகச் சென்றபோது, ஆற்றில் இறங்கி கடக்க வேண்டியதிருந்தது. அப்போது, தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி,  தானே கையில் எடுத்துக்கொண்டு நடந்தார்.  ‘என்னிடம் கொடுங்க..’ என்று உதவியாளர் கேட்டும் தரமறுத்து, ஒரு கையால் செருப்பைத் தூக்கியபடியே நடந்தார். 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு  நெருக்கமான  பிரமுகர் ஒருவர்  “பிரயாணத்தின்போது, தன்னுடைய சூட்கேஸைக்கூட, உதவியாளர் யாரையும் தூக்கவிட மாட்டார்.  ஆறோ, நதியோ, அதன் புனிதத்தைக் காக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.  செருப்பு அணிந்துகொண்டு, ஆற்றில் இறங்க மாட்டார். நீர்ப்பகுதிகளில் வெறும் காலால்தான் நடப்பார். குரங்கணி கொட்டகுடி ஆற்றைக் கடந்தபோதும், அவ்வாறே நடந்துகொண்டார். அவரைப் பொறுத்தமட்டிலும்,  இது ஒன்றும் செயற்கரிய செயலல்ல. பொதுவான அவரது இயல்பே இதுதான்!” என்றார். 

ஒரு சில நடவடிக்கைகளில், மற்ற அரசியல் தலைவர்களிலிருந்து மாறுபட்டு, ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தனித்து தெரியும்போது, ‘சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்ற ஔவையின் மூதுரை பொருந்திப் போகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.