அன்புதான் பக்தி. பல வகையான அன்புகளில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுவது இறைவன் மீது வைக்கும் அன்பே ஆகும். இதுவே பக்தியின் விளக்கம் எனலாம். கண்ணுக்கு இன்பமளிக்கும் உருவம்,மனதுக்கு இன்பமளிக்கும் குணங்கள் உள்ளவர் என இறைவனைக் கருதுவதால், அன்புருவான பக்தி வைப்பது மனிதனுக்குச் சுலபமாகிறது.

 ADMK-OPS-Sabarimala-Iyappa Sami

Advertisment

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதீத இறைபக்தி உள்ளவர். தன்னுடைய குலதெய்வத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருப்பவர். அது போல், சபரிமலை தர்ம சாஸ்தா எனப்படும் சுவாமி அய்யப்பன் மீதும் முழு ஈடுபாட்டுடன் பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்.தற்போது அவர், இரு முடிகட்டி சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சாந்தமான முகமும், அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவமும், அதிகாரத்தில் இருந்தாலும் பணிவும், அவருடைய அடையாளமாகிப் போனதற்குக் காரணம், இறை சக்தியே அனைத்திலும் உயர்ந்தது என்பதை, தீர்க்கமாக அவர் உணர்ந்திருப்பது தான்.

"பக்தி மற்றும் விரதத்தின் வாயிலாக, மனதாலும், உடலாலும், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது, இதுபோன்ற ஆன்மிகப் பயணத்தின்போதுதான் சாத்தியமாகிறது." எனத் தனக்கு நெருக்கமான பக்தி வட்டத்தில் மெய் சிலிர்க்கிறாராம் ஓ.பி.எஸ்.