Skip to main content

"இருக்கு ஆனா இல்ல''  கவுச்சி சங்கதிகள்! 

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
sri reddy



ஸ்ரீரெட்டி திருவாய் மலர்வதற்கு முன்பே, பல ஹீரோயின்கள் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்கள். அட்ஜெஸ்ட் பண்ணினால் தான் சான்ஸ் தருவதாக பல டைரக்டர்கள் ப்ரியா இம்சை செய்கிறார்களாம். ஆனால் எனக்கு அந்த அனுபவம் இல்லை” இப்படிச் சொல்லியிருப்பவர்கள் மலையாள நவ்யா நாயர், பத்ம, திவ்யா உண்ணி, பார்வதி மேனன், நம்ம ஊரு ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா, தம்ன்னா ஆகியோரும் "கொடி'’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனும் சமீபத்தில் சொல்லியிருக்கிறார்கள். 
 

 ’கபாலி’யில் ரஜினிக்கு ஜோடி போட்ட ராதிகா ஆப்தே, ""பணத்துக்காக ஆரம்பத்துல சில செக்ஸ் படங்களில் நடித்தேன். ஒரு முறை தெலுங்கு படத்தில் நடித்த போது முதுகில் அடிபட்டது. அப்போது அந்தப் படத்தின் ஹீரோ என்னிடம் வந்து, தடவிவிடவான்னு கேட்டாரு. அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன்'' என்றார். 
 

 இப்போது லேட்டஸ்டாக பழைய பாலியல் கதையை எடுத்துவிட்டிருக்கிறார் தனுஸ்ரீ தத்தா. ‘"தீராத விளையாட்டுப் பிள்ளை'’ படத்தில் விஷாலுக்கு ஜோடி போட்டவர். “""2009-ல் ஹார்ன் ஓ.கே. ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நானா படேகர் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அவருக்கு எதிராக யாரும் வாய் திறக்கவில்லை. தன்னுடன் நடித்த நடிகைகளை அடித்தும் இருக்கிறார் நானா படேகர். அவர் பிரபல நடிகர் என்பதால் யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை. ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள், நானா படேகருக்கு தங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது” என பொரிந்து தள்ளிவிட்டார் தனுஸ்ரீ தத்தா. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஆகாயத்திற்கா செல்லும்..?'' ஸ்ரீரெட்டி விமர்சனம்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரங்கை  அறிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி மோடியின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சமூகவலைத்தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில்..

 

fdgfd

 

''மே 3ற்கு பிறகு கரோனா வானத்திற்கு செல்லுமா என்ன?? முதலில் ஏழை மக்களைக் காப்பாற்ற நினைத்துப் பாருங்கள்.. குறைந்தபட்சம் உணவுப் பொருட்கள் வாங்கவாவது பணத்தை வழங்குங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது..?'' என பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 

Next Story

சேதப்படுத்தப்பட்ட ஸ்ரீரெட்டி கார்! தமன்னா வெப் சீரிஸ் டீம் குறித்து போலீஸில் புகார்...

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தவர் ஸ்ரீரெட்டி. இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலுள்ள பல பிரபலங்கள் பற்றி மீடூ புகாரளித்தார். இதில் சில தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்தும் மீடூ புகாரளித்திருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

sri reddy

 

 

அண்மையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பதிவில், தமன்னா நடித்து வரும் வெப் தொடர் அவரது வீட்டிற்கு அருகே நடைபெறுவதாகவும் அதனால் பெரும் தொல்லையாக இருக்கிறது. நேரில் போய் அவர்களிடம் பிரச்சனை குறித்து பேச இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. “எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் ‘பங்களா வீடு’ உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.