
சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதுடன், வீட்டிற்கு வந்து தாக்குவதாக மிரட்டுகிறார் எனசூர்யாதேவி என்பவர் மீது நடிகை வனிதா விஜயகுமார் சென்னை போரூர் காவல்நிலையத்தில் தனது வழக்கறிஞருடன் சென்று புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சூர்யாதேவி என்பவர் என்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும், பொய்யான தகவல்களை யூ-ட்யூபில் பதிவிட்டு வருகிறார். இது குறித்து ஏற்கனவே போரூர் காவல் நிலையத்தில்புகார் செய்திருந்தேன். சூர்யாதேவியுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரும்சேர்ந்து கொண்டு அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்குத் தற்போது யாரும் ஆதரவாக இல்லை என்பதால் என்னைக் குறி வைத்து இருவரும் என் மீது அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்று குழந்தைகளுக்குத் தாய் நான். இவ்வளவு நாளா அப்பா, அம்மா சப்போர்ட் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த ஒரே ஒரு விஷயத்துக்காக யார் யாரோ நடுவுல வந்து தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்காங்க. என்னோட வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டும் என்று ஒரு முடிவுசெய்துநேர்மையா ஒரு விஷயம் செய்தேன்,மத்தவங்க மாதிரி ஏமாற்றி தப்பு பண்ணல நான். அதுல ஒரு சின்ன சிக்கல். அது பிரச்சனையே கிடையாது. அதனை லாயர்ஸ் பார்த்துக் கொள்வார்கள். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். வெளியே வருவதற்கே பயமாக இருக்கிறது. சம்மந்தமில்லாத விசயத்தில் யாரும் தலையிட வேண்டாம். சப்போர்ட் இல்லாத பெண்களைக் குறி வைத்து இதுபோன்று தவறாக பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நான் 3 குழந்தைகளுக்கு தாய். என் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்.
தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளேன். நான் எதற்குமே அசராத ஆள்தான். இருந்தாலும் நானும் ஒரு பெண். எவ்வளவுதான் போராட முடியும் இந்த உலகத்துல. எவ்வளவு கீழ்த்தரமான மனுஷங்க இருக்காங்க எனக் கண்ணீர் விட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)