actress vanitha vijayakumar - Advocate Sridhar

சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதுடன், வீட்டிற்கு வந்து தாக்குவதாகமிரட்டுவதாகவும்சூர்யாதேவி என்பவர் மீது நடிகை வனிதா விஜயகுமார் சென்னை போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சூர்யாதேவி என்பவர் என்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும், பொய்யான தகவல்களை யூ-ட்யூபில் பதிவிட்டு வருகிறார். இது குறித்து ஏற்கனவே போரூர் போலீசில் புகார் செய்திருந்தேன். சூர்யாதேவியுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரும்சேர்ந்து கொண்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.

Advertisment

அவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்குத் தற்போது யாரும் ஆதரவாக இல்லை என்பதால் என்னைக் குறி வைத்து இருவரும் என் மீது அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர், வனிதாவை மிரட்டியுள்ளனர். அதனைப் பதிவு செய்து போலீசில் கொடுத்துள்ளோம். வனிதாவை பற்றி பேசிய சூர்யா தேவியை பற்றி நாங்கள் விசாரித்தோம். அவர் சென்னையில் கஞ்சா விற்கும் ஒரு பெண்மணி. அவரும், அவரோட கஸ்டமர் பேசிய வாய்ஸ் ரெக்கார்டிங் என்னிடம் இருக்கிறது. இவர்கள் அரசியல்வாதகிள், சினிமாக்காரர்கள், வழக்கறிஞர்கள் குறித்து பேசுகிறார்கள்.

Advertisment

ஏனென்றால் கஞ்சா வழக்கில் இவர்களைப் பிடிக்கும்போது, இவர்களைப் பற்றி பேசியதால் தன் மீது கஞ்சா வழக்கு போடுகிறார்கள் என்று சொல்லி, அந்த கஞ்சா வியாபாரத்தைக் காப்பாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறார்கள். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறோம். அதுவும் தெரியவருகிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார்.