Skip to main content

நடிகை நக்மா, விஜயதாரணிக்கு புதிய பதவி 

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

 

Actress Nagma, Vijayadaran's new post


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அகில இந்திய மகளிர் காங்கிரசுக்கு 7 புதிய பொதுச்செயலாளர்களையும், 2 புதிய செயலாளர்களையும் நியமித்தார்.
 

நடிகை நக்மா, எஸ்.விஜயதாரணி எம்.எல்.ஏ., ஷோபனா ஷா, ஜர்ஜம் எடி, நீட்டு வர்மா சொயின், நேட்டா டிசவுசா, அனுபமா ரவத் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

எம்.ஹசீனா சையத், சித்ரா சர்வாரா ஆகியோர், மகளிர் காங்கிரஸ் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

நக்மாவையும் விட்டு வைக்காத மோசடி கும்பல்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

 nagma complaint against online fraud

 

பிரபல நடிகை நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியில் அரசியல் பணியாற்றி வரும் நிலையில் தனக்கு ஆன்லைன் மூலம் பணமோசடி நடந்துள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "தான் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு லிங்க்குடன் மெசேஜ் வந்தது. உடனே அந்த லிங்கை க்ளிக் செய்தேன். பின்பு ஒரு போன் கால் வந்தது, அதில் தான் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி கே.ஒய்.சி விவரங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என சொல்லித்தருவதாக ஒரு நபர் பேசினார். அவரிடம் நான் எந்த விவரத்தையும் சொல்லவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து ரூ.99,998 பணம் திருடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

ad

 

இது தொடர்பாக கூறிய நக்மா, "அந்த நபருடன் பேசிக் கொண்டிருக்கையில் எனது போனை கட்டுப்பாட்டில் எடுத்து, இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டார். அப்போது தொடர்ந்து எனக்கு ஓடிபி வந்து கொண்டிருந்தது. அதனால் இன்னும் அதிகமாக பணம் எடுக்க முயற்சித்த அவர்கள் அதிக தொகையை எடுக்க முடியவில்லை" என்றார்.

 

சமீப காலமாக ஆன்லைன் பணமோசடி அதிகமாக அரங்கேறி வருகிறது. இதில் திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கூட இந்த ஏமாற்று வலையில் சிக்கியிருக்கின்றனர். சமீபத்தில் இதே பாணியில் ஒரே வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை திருடியுள்ளனர். அதில் பிரபல நடிகை ஸ்வேதா மேனனும் ஒருவர். அதைத் தொடர்ந்து இப்போது நக்மாவுக்கும் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

Next Story

நடிகை நக்மாவுக்கு அமீரகம் கொடுத்த சிறப்பு அங்கீகாரம்

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

actress nagma has been grantedg olden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. 

 

அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கும், ஊர்வசி ரவுடேலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், திரிஷா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை நக்மா தனக்கு விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.