செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குஷ்புக்கு லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூரில் நடைபெற இருந்த வேல் யாத்திரையில் பங்குபெற அவர் காரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.