நகைச்சுவை நடிகர் விவேக்கின் காமெடியில் ஒரு சமூக உணர்வு இருக்கும். படங்களில் மட்டுமில்லாமல் எதார்த்த வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த தொண்டினை சமூகத்திற்கு செய்து வருகிறார் விவேக். அவர் இது வரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'சந்தித்த வேளை' என்ற படத்தில் வரும் காமெடி காட்சி ஒன்றின் டெம்லேட் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இதை வைத்து ஏராளமாக மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த template இப்போ trend ஆகிறது. இது”வர்றான்;கலாம்கிறான்;மரம் நடுறான்; அப்புறம் நம்மள தண்ணி ஊத்த சொல்லீட்டு போயிர்றான்” என்று trend ஆனால் நன்றாக இருக்குமே!! pic.twitter.com/0GV843Xt26
— Vivekh actor (@Actor_Vivek) February 10, 2020
இதற்கிடையில் அந்த வைரல் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விவேக் "இந்த டெம்ப்லேட் இப்போது ட்ரெண்ட் ஆகிறது. இது 'வர்றான்;கலாம்கிறான்;மரம் நடுறான்; அப்புறம் நம்மள தண்ணி ஊத்த சொல்லீட்டு போயிர்றான்' என்று மரம் நடும் விஷயத்தை வைத்து ட்ரெண்ட் ஆனால் நன்றாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று வேவக் ரசிகர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் மரம் நடும் விஷயத்தை வைத்து மீம்களை உருவாக்கி வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.