Skip to main content

சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை கோரிய மனு! -பதிலளிக்க நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

 

actor vishal movie chennai high court

 

 

சக்ரா படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஷால்- நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாகக் கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் ஒரு கதையைச் சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் "சக்ரா" என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை,  இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார்.  அந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமென ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

actor vishal movie chennai high court

 

 

அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். இதுபோல, தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்கவும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயைச் செலுத்த உத்தரவிட வேண்டுமென, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால், குறுகிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

 

இதையடுத்து, வழக்குகள் குறித்து செப்டம்பர் 24- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வசனம் - விஜய்யைத் தொடர்ந்து விஷால்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vishal rathnam trailer released

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது. பின்பு கடந்த மார்ச் 3, படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியானது. அடுத்ததாக ‘எதனால’ பாடல் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் பிரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையோர பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரை காப்பாற்ற விஷால் முயற்சி எடுக்கிறார். எதனால் பிரியா பவானிக்கு பிரச்சனை வந்தது. விஷால் அவரை காப்பாற்றினாரா இல்லையா, விஷாலுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு? ஆகியவற்றை விரிவாக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் விஷால், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆக்ரோஷமாக சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுகின்றனர்.
 
இந்த ட்ரைலரில் விஷால் பேசிய அதே வசனத்தை, கடந்த ஆண்டு வெளியான லியோ பட ட்ரைலரில் விஜய் பேசினார். அப்போது அந்த வசனத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்ப, பின்பு அதை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஷாலும் அதே வசனத்தை பேசியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.