Skip to main content

’வாத்தியார்’ ஆன விஜய்! ‘சின்னவர்’ ஆன சினேகன்! -காலம் ‘ரொம்பவே’ மாறிவிட்டது!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

‘என் ராஜால்ல.. என் மந்திரில்ல..’ 
-உணவு ஊட்டும்போது  அம்மாக்கள் பிள்ளைகளை இப்படிக் கொஞ்சுவார்கள். 

 

ராஜா, ராணி, இளவரசி, மந்திரி, ராஷ்டிரபதி, கோடீஸ்வரன், தங்கம், வைரம், முத்து என, இந்த உலகத்தில் உயர்வாக மதிக்கப்படும் அடையாளங்களை, பிள்ளைகளுக்கு பெயராகவே சூட்டி அழைப்பதில் பெருமிதம்கொள்ளும் பெற்றோர் உண்டு. 

 

ஆனாலும், இந்தப் பட்டத்துக்கு இவர் ஒருவர் மட்டுமே தகுதியானவர் என, நம் மனதில் உறுதிபட நிலைத்துவிட்ட விஷயங்கள் பல உண்டு. காந்தி ஒருவர் மட்டுமே நமது பார்வையில் 'மகாத்மா' ஆவார். மனிதருள் மாணிக்கம் என்றால், அது 'நேரு'தான். 'கர்மவீரர்' என்றால், அது காமராஜர்தான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், தமிழ்ச் சினிமா உலகில் ‘வாத்தியார்’ என்றாலோ, ‘சின்னவர்’ என்றாலோ, அது எம்.ஜி.ஆர். மட்டும்தான்! அதே நேரத்தில், நாளைய முதல்வர் பட்டத்தை, யாருக்காகவும், யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ‘நாளைய முதல்வர்’ பட்டம் மலிவாகிவிட்டது.

 

எங்க வீட்டுப் பிள்ளை என்றால் எம்.ஜி.ஆர். நடித்த ஒரு எங்க வீட்டுப் பிள்ளைதான். சிவகார்த்திகேயன் படத்திற்கெல்லாம் அந்த டைட்டிலைத் தர முடியாது என்று கறார் காட்டியதால், சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை ஆனது. அதே நேரத்தில்  ‘உத்தமபுத்திரன்’ என்ற ஒரே டைட்டிலில். பி.யு.சின்னப்பா, சிவாஜி கணேசன், தனுஷ் ஆகிய மூன்று நடிகர்கள் நடித்துள்ளனர். 

 

சரி, நடப்பு விஷயத்துக்கு வருவோம். நடிகர் விஜய்யை முதலில் 'இளைய தளபதி' என்றார்கள். பிறகு, 'தளபதி' என்றார்கள். 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘வாத்தி கமிங் ஒத்து’ என்ற வரிகள் பாடலில் வருவதால், ‘வாத்தி’ என்றார்கள். அதுவே ‘டெவலப்’ ஆகி,  ‘வாத்தியார்’ என்றே, பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். 

 

‘வாங்கய்யா வாத்தியாரய்யா..’ என்று எம்.ஜி.ஆர். நடித்த 'நம்நாடு' திரைப்படத்தில் பாடலே உண்டு. ஏனென்றால், அந்தப் படம் வருவதற்கு முன்பே, ‘வாத்தியார்’ பட்டத்துக்கு அவர் சொந்தக்காரர் ஆகிவிட்டார். சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சளைக்காமல் சொல்லி வந்ததால், வாத்தியார் பட்டம் அவருக்கு மிகவும் பொருந்திப் போனது. அதேபோல்தான், ‘சின்னவர்’ பட்டமும், தமிழ்ச் சினிமா உலகில் எம்.ஜி.ஆர். ஒருவருக்கு மட்டுமே உரித்தானது. 

 

http://onelink.to/nknapp

 

‘காலம் மாறினால், எல்லாமே மாறிவிடும்’ எனச் சொல்வதும்,  ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதும், நிரூபணமாகியே வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் ‘வாத்தியார்’ அவதாரம் எடுத்துள்ளார். பாடலாசிரியரும் நடிகருமான சினேகனை ‘சின்னவர்’ என்கிறார்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினர். 

 

‘என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே!’ என சகலத்தையும் ஏற்றுக்கொள்ளும், பக்குவ மனநிலையில்தான், மக்களும் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.