Skip to main content

நடிகர் தவசிக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 


நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

 

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.‘

 

இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறியதாவது, தவசி 11.11.2020 அன்று உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் எங்களது மருத்துவமனையில்  உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். 

 

140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எங்களது கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் "கண்ணே கலைமானே" திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பு தளத்தில் தான் எனக்கு இவர்  அறிமுகமானார்.

 

 இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு பேருதவியாக இருக்கும் என்றார் டாக்டர் சரவணன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.