/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SZSFSFSFSF_3.jpg)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையை தொடர்ந்துஇருவரும் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு திரையுலகினர், விளையாட்டு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/XZVXVXVXVX.jpg)
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். கோவில்பட்டியில் நிகழ்ந்த அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது. தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளனர். கொடூரமான மரணத்தில் கடமை தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்" எனதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)