Actor Sivakarthikeyan adopts a lion and a tiger!

சிங்கம், புலியை 3 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை வண்டலூரில் உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவில், 3,000க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலங்குகளை காண, தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள். அதே சமயத்தில் விலங்குகளை தத்தெடுப்பதற்கும், பராமரிப்பதற்கும் பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில், இந்த பூங்காவில் வளர்ந்து வந்த ‘ஸ்ரேயர்’ என்ற சிங்கத்தையும், ‘யுகா’ என்ற புலியையும் 3 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இவர் ஏற்கெனவே, கடந்த 2021ஆம் ஆண்டு யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.