தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு பேசியவதாவது,
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் வணக்கம். மாணவர்கள்.,பெரியவர்கள், தாய்மார்கள் எல்லாருக்கும் வணக்கம். இங்கு கூடியுள்ள என் ரத்தமான பிள்ளைங்களுக்கு வணக்கம். நீங்க இல்லாம நான் இல்ல, எஃப்ஒன் கார் ரேஸ் யாராவது பார்த்திருக்கிறீர்களா? எஃப்ஒன் கார் ரேஸ்ல நிறைய லேப் இருக்கும் தொடர்ந்து ஓட்டிக்கொண்டே இருக்க முடியாது வேண்டிய நடுவுல சின்ன கேப் எடுக்கணும், அதுக்கு பேரு பிட்ஸ்டாப் அப்படின்னு சொல்லுவாங்க. அங்க நிறுத்தி தான் வண்டிக்கு ஃபியூயல் பிடிக்கணும், தேஞ்சு போன சக்கரத்த மாத்தணும், நம்மள ரெடி பண்ணனும். அதுக்கப்புறம் வண்டி உள்ள வந்ததுன்னு வச்சிக்கோங்க... என்னைக்கும் சொல்றேன் இப்பவும் சொல்றேன் ஃபர்ஸ்ட் யாரு முன்னாடி போறாங்க அப்படிங்கிறது முக்கியம் இல்ல... கடைசில யாரு பர்ஸ்ட் வர்றாங்கங்றதுதான் முக்கியம். நாம வரோம்.... உங்களுடைய அன்புதான் என்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்கு. சின்ன வயசுல இருந்தே என்னை நடிக்க வைத்து விட்டார்கள், நீங்களும் என்ன சின்ன வயசுல இருந்தே ஒரு ஆளு ஆகிட்டீங்க... நானும் ஒரு சின்ன கேப் எடுத்துக்கிட்டேன். மன்னிச்சுக்கோங்க கோவிசுக்காதீங்க...
ஆனா இப்ப சொல்றேன் நான் திரும்பி வந்துட்டேன் இனிமேல் எங்கேயும் போகமாட்டேன் உங்களை விட்டு என்னைக்குமே போக மாட்டேன். ஜெயிச்சுட்டு இருக்கும்போது நம்ம பின்னாடி நிறைய பேர் வருவாங்க நம்மள சுத்தி ஒரு பெரிய கூட்டம் இருக்கும். ஆனா ஒருத்தன் கஷ்டத்தில் இருக்கும்போது, ஒருத்தன் தோத்துட்டான்னு சொல்லும்போதும் நீங்க எல்லாரும் நின்னிங்க பாத்தீங்களா எனக்காக... உங்கள நான் எப்படிங்க விட்டுக் கொடுப்பேன்.
நாமெல்லாம் சினிமா பார்த்திருப்போம். அந்த சினிமாவில் நிறைய கேரக்டர் இருக்கும். ஒரு படம் நிறைய கதாபாத்திரம் இருக்கும் அப்படி ஒருத்தன் ஃபர்ஸ்ட்ல இருந்து கஷ்டப்பட்டுட்டே இருக்கான். அவனுக்கு பிரச்சினை வந்துகிட்டே இருக்கு, அவனை தட்டி விடுறாங்க, அவனைக் கீழே தள்ளுறாங்க, அவனுக்கு காதல் பிரச்சனை, அவனை எதுவுமே செய்ய விடாமல் ஒரு சிலர் தடுத்து நிறுத்தினார்கள், அவன ரோட்டில் நிறுத்திட்டாங்க, அடிச்சு காலி பண்றாங்க... ஆனா கடைசி வர நின்னு ஜெயிக்கிறான். அவனுக்கு பேரு என்னங்க ''ஹீரோ''
அதே படத்தில் ஃபர்ஸ்ட்ல இருந்து ஒருத்தன் ஹேப்பியாக இருக்கான், ஜெயிச்சுட்டே இருக்கான், சந்தோஷமா இருக்கான், எல்லாமே நாம தான் நினைக்கிறான், எந்த பிரச்சினையும் இல்ல நாம தான் இனிமேல், அவனுக்கு பேர் என்னங்க ''வில்லன்'' இதை படத்துல பார்த்தீங்க... ஒரு ரியல் லைஃப்ல நான் கவலையே படமாட்டேன்.
அட்வைஸ் எல்லாம் உங்களுக்கு நான் பண்ண வேண்டிய இடத்துல இல்ல, எவன் அட்வைஸையும் கேட்காதீங்க... இவங்க பண்ற அட்வைஸ் எல்லாம் கேட்டீங்கன்னா இஸ்கா தான். நான் சொல்றது அட்வைஸ் கிடையாது என் வாழ்க்கையில நான் பட்ட விஷயத்தை ஒரு பிரண்டா ஒரு நண்பனா ஷேர் பண்ற அவ்வளவுதான், புடிச்சா எடுத்துக்கோங்க பிடிக்கலனா விட்டுருங்க.. கஷ்டம் வருதுன்னு ரொம்ப பீல் பண்ணாதீங்க கஷ்டம் வந்துச்சுன்னா உடனே பாட்டு போட்டு டான்ஸ் ஆடுங்க. பிரச்சனையே இல்லாத வாழ்க்கை எதுக்குங்க, அது வாழ்க்கையே இல்லை. எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க யார் சொல்றத பத்தியும் கவலைப்படாதீங்க... உங்களுக்குள்ள இருக்கிற விஷயத்தை தட்டி எடுத்து எழுப்பி காட்டி அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போயிட்டே இருங்க என பேசினார்.