தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் நடிகர் சரவணனும் ஒருவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சர்ச்சை ஏற்படும் வகையில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள், சரவணன் என்ன காரணம் என்று தெரியாமல் வெளியேறியது, மற்றொன்று மதுமிதாவின் தற்கொலை முயற்சி. இந்த இரண்டு சம்பவங்களும் ஏன் நடந்தது என்று இதுவரை பிக் பாஸ் குழுவினர் விளக்கம் கொடுக்கவில்லை. நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது. வெளியேறும் போது கன்ஃபெஷன் ரூமின் மற்றொரு கதவு வழியாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது சரவணனின் கண்களை கறுப்புத் துணியால் கட்டி, அழைத்து சென்றனர் நிகழ்ச்சி குழுவினர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் பிக்பாஸில் பேசப்பட்ட பணம் வந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சரவணன் , நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பியது சோகமாக இருந்தது. ஆனால் தொலைக்காட்சி போட்ட அக்ரீமென்டை மீறாமல் நடந்தேன் . நூறு நாள் பொறுத்து சம்பளம் கேட்டேன், ஆனாலும் சில நாட்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது . பிறகு ஒரு வழியா அதை வாங்கிட்டேன், ஆனால் இதற்கு முந்தைய இரண்டு பிக் பாஸ் சீசன்களில் எல்லாம் முரண்டு பிடித்தவர்களுக்கு உடனே சம்பளம் வழங்கி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில் அதிகம் வருத்தம் எனக்கு உள்ளது. அவ்வாறு முரண்டு பிடித்தா உடனே பணம், அமைதியா இருந்தா தாமதமாக கொடுக்கிறாங்க என வருத்தத்துடன் கூறியுள்ளார்.