Skip to main content

'இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது'- கமல்ஹாசன் ட்வீட்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

actor kamal hassan tweet babri masjid judgement

 

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்பட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மனைவி, குழந்தைகளை கொன்று உடல்களுடன் 3 நாட்கள் தங்கிய கணவர்; விசாரணையில் திடுக் தகவல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Shocking information in the investigation about Husband who incident wife, children

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம் பிஜினூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகன் (32). இவருக்கு கடந்த  7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிவிட்டது. இந்த தம்பதிக்கு பயல் (6), ஆனந்த் (3) என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், ராம் லகன் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த ராம் தங்கியுள்ள வாடகை வீட்டின் கீழ் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர், ராம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு, ஜோதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பிணமாக கிடப்பதையும், உடல்களோடு ராம் லகன் தங்கி இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஜோதி தனது செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மனைவி ஜோதியின் நடத்தையில் மீது ராம் லகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு இது தொடர்பாக மீண்டும் ராம் லகன், ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராம் லகன், தனது மனைவி ஜோதியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து, மனைவியை கொலை செய்ததை தனது குழந்தைகள் வெளியே கூறிவிடலாம் என்று எண்ணிய ராம் லகன், தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், 3 பேரின் உடலையும் வெளியே  எடுத்து செல்ல அச்சத்தில் இருந்த ராம் லகன், 3 பேர் உடலையும் வீட்டிலேயே வைத்து 3 நாட்கள் தங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் கொலை செய்த ராம் லகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி, குழந்தைகளை கொன்று 3 நாட்கள் கணவர் தங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.