/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/96_6.jpg)
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே சித்ராவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது ஹேம்நாத்திடம் தொடர்ந்து நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹேம்நாத் மற்றும் சித்ராவுக்கு பதிவு திருமணம் நடைபெற்றதால் திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சித்ரா மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கணவர், சித்ராவின் அம்மா மேலும் அவர் பணியாற்றிய தொலைக்காட்சியில் உள்ள சிலரிடம் விசாரணை செய்ததில் சில முக்கிய தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் மர்ம மரணம் அடைந்த அன்று இரவு ஒரு ஆம்புலன்ஸ் அவர் தங்கிருந்த ஹோட்டலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா வேறு எங்கேனும் மரணமடைந்தாரா இல்லை, அவர் இறந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கேமராவில் காவல்துறையினர் விடியவிடிய ஆய்வு செய்து இந்த மர்ம மரணம் தொடர்பாக பல முக்கிய தகவல்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. சித்ரா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை வேறுபக்கம் திரும்புயுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)