actor and director ramdoss passed away

பிரபல இயக்குநரும்நடிகருமான ராமதாஸ்(66) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்ராமதாஸ்.ராஜா ராஜாதான், வாழ்க ஜனநாயகம், சுயம் வரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விசாரணை, விக்ரம் வேதா, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் எழுத்தாளராகவும் ராமதாஸ் பணியாற்றியிருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் இயக்குநரும்நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ராமதாஸின் மறைவுக்குத்திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment