Skip to main content

“இந்த இரண்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்”- டி.எஸ்.பி பேட்டி!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021
"Action will be taken to prevent these two crimes" - DSP interview

 

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில், சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம்,  உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் முருகன், கஞ்சா ஒழிப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட போலீஸாரைக் கொண்ட குழுவினர் கஞ்சா விற்பனையைக் கண்காணித்துவந்தனர்.

 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (04.07.2021) சிதம்பரம் பள்ளிப்படை அருகில் நின்றிருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த வெற்றிவேலை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் சிதம்பரம் நகர் உட்பட பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவருவதாக தெரியவந்தது. மேலும் அவர் சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு 5 கிலோ கஞ்சாவை விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை செய்தபோது வெற்றிவேல் விற்பனை செய்த சிதம்பரம் காட்டுபாவா சந்தையைச் சேர்ந்த அப்துல் பாரூக் மகன் சாகுல் ஹமீது (35), வடக்கு தெருவைச் சேர்ந்த முகமது பாருக் மகன் பயாஸ் (23), அண்ணா தெரு சண்முகம் மகன் கார்த்திகேயன் (26), அனந்தீஸ்வரன் கோவில் தெரு செல்வராஜ் மகன் நடராஜன் (40), ராஜலட்சுமி நகர் ராஜமாணிக்கம் மகன் சுப்பு (36), தில்லை அம்மன் நகர் மணி மகன் மாசிலாமணி (43) ஆகிய 7 பேரிடமிருந்து மொத்தம் 5 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள்,  ரூ. 7,000 பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்து வெற்றிவேல் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.

 

இதுகுறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கூறுகையில், “சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட அனைத்து குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் முருகன், நாகராஜன்  மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்