கோவில் சொத்துகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில் நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வந்தது. இவ்வாறு குத்தகைக்கு எடுப்பவர்கள் கோவில் நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் மறு வாடகை அல்லது மறு குத்தகைக்கு விட்டு சட்டவிரோதமாக அதிக வருவாய் ஈட்டி வந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனால் அரசுக்கு அதிகளவில் இழப்பு ஏற்படுவதாகக் கூறி கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்,சிறப்பு தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கோவில் சொத்துகள் மூலம் முறைகேடாக வருவாய் ஈட்டி வருவதாக சிறப்பு தாசில்தார் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
இதன் பின்னர் இந்தக் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை. விசாரணையை தொடர்ந்து நடத்தி கோவில் சொத்துகளை மீட்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் - ஹேமலதா அமர்வு, சேலம் மாநகர திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.