Skip to main content

'வலிமை' சிமெண்ட் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Action to make 'Strength' cement available everywhere- Interview with Minister!

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், இன்று (16/11/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை சார்பில், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் 'வலிமை’யை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் மேஷ்ராம் இ.ஆ.ப. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வலிமை சிமெண்ட் அதிக உறுதி தன்மையைக் கொண்டது. வலிமை சிமெண்ட் விரைவில் உலரும் தன்மை கொண்டது. இந்த சிமெண்ட் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. ஒரு மூட்டை 'வலிமை PPC' சிமெண்ட்டின் விலை ரூபாய் 350 ஆகவும், ஒரு மூட்டை 'வலிமை OPC' சிமெண்ட்டின் விலை ரூபாய் 365 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Action to make 'Strength' cement available everywhere- Interview with Minister!

 

பொதுமக்களிடையே 'வலிமை' சிமெண்டைக் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்யப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் 'வலிமை' சிமெண்ட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 30,000 மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசுத் திட்டங்களுக்காகவும் 'வலிமை' சிமெண்ட் பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்; “உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” - டெல்லி அமைச்சர்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Delhi Minister spoke about Bail for Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பாஜகவுக்குத் தெரியும். அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், இன்னொரு சதித்திட்டத்தை தீட்டி, ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நாளில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அவர் ஏன் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்? ஏனென்றால், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து, 10 மடங்கு வேகமாக டெல்லி மக்களுக்காகப் பணியாற்றுவார். இன்றைக்கு பிஜேபிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமும் உங்கள் சதி திட்டத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு நீதிமன்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி வருகிறது. பா.ஜ.க.வுக்கு மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வந்து மற்ற கட்சிகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்துங்கள். உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார். 

Next Story

கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Discovery of pots with fish motifs on the bottom!

கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்புரம் சிவப்பு வண்ணப்பூச்சு பெற்ற பளபளப்பான பானை ஓடுகளில் இம்மீன் உருவங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. பகுதி உடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள மீன் உருவம் பொறிக்கப்பட்ட இப்பானை ஓடுகளின் நீளம் மற்றும் அகலம் முறையே 4X 5 செ.மீ மற்றும் 4 X3 செ.மீ ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். 

Discovery of pots with fish motifs on the bottom!

முன்னதாக, ‘கடலூர் மாவட்டம், மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் இராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.