Skip to main content

மின் கம்பத்தில் துணி காயவைத்த விபரீதம்; 3 பேர் உயிரிழப்பு

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Accident of clothes drying on electric pole; 3 people lost their lives

 

தர்மபுரியில் விபரீதமாக மின் கம்பத்தில் கம்பியை கட்டி துணி உலர்த்தி வந்ததில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ளது ஓடச்சக்கரை கிராமம். இந்த கிராமத்தில் மாது என்பவர் வீட்டிற்கு அருகில் மின் கம்பம் ஒன்று இருந்தது. அந்த கம்பத்திற்கும் வீட்டுக்கும் இருந்த இடைவெளியில் இரும்பு கம்பி ஒன்றைக் கட்டி மாது அதில் துணிகளை உலர்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த பகுதியில் பலத்த மழை பொழிந்தது. அதில் கம்பியானது கீழே விழுந்தது. இதைக்கண்ட மாதுவின் மனைவி மாதம்மாள் கம்பியை மீண்டும் மின் கம்பத்தில் கட்டுவதற்காக கையில் எடுத்துள்ளார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்து மாதம்மாள் கீழே விழுந்தார்.

 

அவரின் அலறல் சத்தம் கேட்டு மகன் பெருமாள் மற்றும் உறவினர் சரோஜா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கம்பத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்கிலிருந்து மின்சாரம் கசிந்து இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நகைகள் கொள்ளை சம்பவம்; 48 மணி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட போலீசார்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

covai Jewelery shop incident The police took action within 48 hours

 

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது.

 

மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'ஒருவர் மட்டுமே உள்ளே புகுந்து நகைக் கடையில் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையன் பிடிபடுவார்' என்று தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

 

covai Jewelery shop incident The police took action within 48 hours

 

இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொள்ளை போன 48 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நகைகளை பறிமுதல் செய்த போலீசார் கொள்ளையன் விஜயகுமாரையும், அவரது நண்பர் சுரேஷையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்