
தண்டவாள பராமரிப்பு, ரயில் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் நேற்று அதிகப்படியான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்த முடியாமல் பேருந்து நிலையங்களை நாடியதால் கூட்டணி நெரிசல் ஏற்பட்டு அவதிக்குள்ளாக்கினார்.
குறிப்பாக தாம்பரம் - சென்னை கடற்கரையின் இரு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சோதனை ஓட்டமாக ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மின்சார ரயிலின் பயணிகள் வசதிக்காக ஏசி பெட்டிகளை இணைக்க ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுவும் பரிந்துரை அளித்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் மின்சார ரயிலில் இரண்டு அல்லது மூன்று ஏசி பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.