/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/abiami kunrathur.jpg)
சென்னை அடுத்த குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறர் விஜய் (30). சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் இவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (25). இத்தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், வங்கியில் திடீரென அமைந்துவிட்ட இரவுப்பணி முடிந்து நேற்று காலையில் விஜய் வீட்டிற்கு வந்தபோது, அங்கே தன் இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். மனைவி அபிராமியை காணவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த விஜய் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு நெருக்கமான சுந்தரம் என்பவரை விசாரித்தபோது, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்ய அபிராமி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. விஜய் அன்று இரவு வராததால் குழந்தைகளுக்கு மட்டும் விஷம் கலந்த பாலை கொடுத்து அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிந்ததும் வீட்டில் இருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு தப்பிவிட்டார் என்று தெரியவந்தது.
இதன்பின்னர் தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அவர் பிடிபட்டார். பிடிபட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)