Skip to main content

கொள்கையைக் கைவிட்ட பா.ம.க.! 

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Abandoned the policy of the PMK
 பாமக வேட்பாளர் சி.அன்புமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடுகிறது. பாமகவின் வேட்பாளராக அன்புமணியை நிறுத்தியிருக்கிறார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி. வேட்பாளராக அறிவுக்கப்பட்டுள்ள அன்புமணி, ஏற்கெனவே  2016-இல்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டவர்.

2016-இல் தனித்து பாமக களம் கண்ட போது போட்டியிட்ட அன்புமணி,  சுமார் 41,428 வாக்குகளைப் பெற்றார். பதிவான வாக்குகளில் இது 23.19 சதவீதமாகும். அந்த அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தல்களில் பாமக போட்டியிடுவதில்லை என்பதும், ஒரு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டால் அந்தச் சமயத்தில் அந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றதோ அந்தக் கட்சிக்கே வாய்ப்பு தருவதற்கேற்ப தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்பதும் பாமகவில் எடுக்கப்பட்ட முடிவு. அதுவே பாமகவின் கொள்கையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், தனது கொள்கையை கைவிட்டுவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை பாமக தலைமை எடுத்துள்ளது. இந்த முடிவு பாமகவிலேயே சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.

இது குறித்து நம்மிடம்  பேசிய பாமகவினர், “நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாமக ஜெயிக்கவில்லை. தர்மபுரியில் நிச்சயம் வெற்றி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் தோல்வியைத் தழுவியது பாமக. வட தமிழகத்தில் பாமகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதையும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பார்கெய்ன் பவரை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. மற்றபடி கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒரே கட்சி பாமக தான்” என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அரசின் சாதனை திட்டங்களை சொன்னாலே  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறலாம்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
You can get a huge victory in  by-elections if you tell the govt achievements says Minister I. Periyasamy

ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திண்டுக்கல் மாநகரில்  உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனு மற்றும்  கிராமங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை  மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். 

அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்ட  தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து களப்பணி ஆற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் பணியாற்றக்கூடிய  பகுதிகள் குறித்து கேட்டறிந்ததோடு வரலாறு காணாத வெற்றியை பெறும்  அளவிற்கு ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில்  ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.   

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில்  40க்கு40 பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் அனைத்து  கிராமங்களும் தன்னிறைவு பெற்று வருகின்றன. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை  மூலம் அனைத்து கிராமங்களும் சாலை வசதி, குடிதண்ணீர், தெருவிளக்கு வசதி  நூறு சதவிகிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் மூலம்  லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று தங்கள் விளை பொருட்களை  அருகில் உள்ள நகரங்களுக்கு சிரமமின்றி எடுத்துச் சென்று பயன்பெற்று  வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழகம் முதல்வரின் சாதனை  திட்டங்களையும், மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் மற்றும் பெண்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் சென்று  எடுத்துரைத்தாலே எளிதாக மாபெரும் வெற்றி பெறலாம்” என்று கூறினார்! 

Next Story

“அரசு கலைக் கல்லூரிகளில் நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Ramadoss insists Permanent principals should be appointed in government arts colleges

முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது. அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

முதல்வர்கள் இல்லாமல் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். அதனால், முதல்வர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய முதல்வர்களை தேர்வு செய்து நியமிக்க முடியும். அதை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதமோ, இரு மாதங்களோ காலியாக கிடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காலியாகக் கிடக்கின்றன என்பது தான் கவலையளிக்கும் உண்மையாகும். 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இப்போது காலியிடங்களின் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகி விட்டது. மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மே மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் பணியிடங்களை அரசு நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், நிலையான முதல்வர்களை நியமிப்பதற்கு மாறாக பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முயல்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.

நிலையான முதல்வர்களுக்கு மாற்றாக பொறுப்பு முதல்வர்களைக் கொண்டு கல்லூரியை நடத்துவதால், கல்லூரியின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க அரசுக்கும் கூடுதல் செலவு ஆகிறது. தமிழக அரசு 2022-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின்படி, ஒரு கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் மூத்த இணைப் பேராசிரியர் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு அவரது மொத்த ஊதியத்தில் 20% அல்லது முதல்வர் பணிக்கான ஊதியத்தில் 50%, இவற்றில் எது குறைவோ அதை கூடுதல் ஊதியமாக வழங்க வேண்டும். அதன் மூலம் பொறுப்பு முதல்வருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இது நிலையான முதல்வருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட அதிகம் ஆகும். கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.