77th Independence Day Celebration organized by Besant Nagar Beach Friends Group

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாம் கொண்டாடுகிறோம். 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனியானசுதந்திர நாடானதைக்குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

Advertisment

இந்த நாளில் இந்தியப் பிரதமர் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். அன்றைய தினம் பிரதமர் நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

Advertisment

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் - முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்கள்.

இதேபோல் சென்னை பெசன்ட் நகர் பீச் ஃப்ரண்ட்ஸ் குரூப் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவினைக் கொண்டாடினார்கள். அடையார் ஆனந்தபவனின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் ராஜா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பழனிராஜா மற்றும் மோகன் ராகவன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. பீச் ஃப்ரண்ட்ஸ் குரூப் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.