chennai

கோப்புப்படம்

லெபனான் நாட்டின் தலைநகர்பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது.பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர், 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

லெபனான் நாட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய அந்தவிபத்தை தொடர்ந்து சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு மணலியில்வைக்கப்பட்டுள்ளஅமோனியம் நைட்ரேட்குறித்துசென்னையில் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.கடந்த ஆறு வருடமாக பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மணலில் வேதி கிடங்கில் பத்திரமாக உள்ளது. அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதால் சென்னை மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisment