Skip to main content

செம்பரம்பாக்கத்தில் 7 ஆயிரம் கனஅடி  நீர் திறப்பு... அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020
7 thousand cubic feet of water opening in Sembarambakkam ... Warning to the coastal people of Adyar !!

 

'நிவர்' புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 80 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 85 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் கட்டமாக 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் திறக்கப்படும் நீரின் அளவானது 3,000 கனஅடியாக அதிகரித்திருந்தது. மாலை 6 மணி முதல் மேலும் கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து என்பது 6,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அடையாறு கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீராணம் ஏரியில் நச்சுக்கலப்பா? அதிகாரிகள் விளக்கம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Officials have explained that there is no bad liquid in Veeranam Lake

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதிகளில் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஏரியில் நச்சு கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த 2018-19 ஆண்டில் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுகள் இருக்க கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீராணம் ஏரியில் 1 லிட்டர் நீரில் 17.72 மைக்ரோகிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபனிடம் கேட்டபோது, “வீராணம் ஏரியை சுற்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை, நச்சுகழிவுகள் கலக்க வாய்ப்பில்லை. இவர்கள் தண்ணீர் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துள்ளார்களா? என்று தெரியவில்லை. தற்போது வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. இதனை விவசாயத்திற்கு அளித்து வருகிறோம். தண்ணீர் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ள முடியாது” என்றார்.

இந்த தகவல் குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் செயற்பொறியாளர் ராம்ஜியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறையும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்போது தண்ணீரை பலமுறைகளில் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். வீராணம் ஏரியில் எந்த ஒரு நச்சும் இல்லை. எனவே தண்ணீரை சோதனை செய்து தான் எடுக்கிறோம்” என்றார்.

அதேபோல் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப்பொறியாளர் அனந்தராயன் கூறுகையில், “வீராணம் ஏரியை சுற்றி எந்த நச்சு கழிவுகள் கலக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த தகவல் வெளிவந்த பிறகு பொதுமக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை சாம்பிளுக்கு எடுத்துச் சென்று ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம். ஆய்வகத்தில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து முழுத்தகவலும் வெளியிடப்படும்” என்றார்.

வீராணம் ஏரியில் நச்சு உள்ளது என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை விரைவில் மாவட்ட நிர்வாகம் கலைய செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
 Increase in water flow to Sembarambakkam Lake

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று வினாடிக்கு 36 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 497 கன அடியாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 21.93 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி இருந்தது. இன்றைய நிலவரப்படி 22.05 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.