கோவை பன்னிமடையை சேர்ந்த பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் நேற்று முன்தினம்அதிகாலை கைகள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தநிலையில் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகி கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சம்பவத்தில்சந்தேகத்தின் பெயரில் கைது செய்த விஜயகுமார் உட்பட4 பேரை காவல்துறையினர் பெற்றோர்களிடம் காணொளி காட்சிகளின் மூலம் காண்பித்ததால் பெற்றோர்கள் சிறுமியின் உடலை நேற்றுவாங்க சம்மதித்தனர்.
துடியலூர்பகுதியில் நேற்றுநான்கு மணி நேரமாக சாலை மறியல் செய்தவர்களிடம் நாளை மாலை 3 மணிக்குள் கொலையாளிகள் பிடிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று வரை குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இதுதொடர்பாக பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் எனவும்நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் இதுதொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிந்தால்துப்புக்குக்கொடுக்க தற்போது இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க 9443122744, 9498174226, 9498174227 தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.