Skip to main content

ஹோட்டல் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

6 people were arrested for attacking the hotel worker and snatching his cell phone

 

மேற்குவங்க மாநிலம் மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம். அது குறித்து ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளது. அதைக் கண்ட அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களைத் தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

 

இது குறித்து ரஹிம்ஷா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; இருவர் கைது

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Prohibited lottery sales; Two arrested

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னிமலை, ரோடு, கே.கே. நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள துணி சலவை செய்யும் கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் காசி பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (38), பூவரசன் (27) என்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 10, 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

சர்வதேச யோகா தினம்; 100 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
 International Day of Yoga; Awareness by doing 100 Yogasanas

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக சமுதாய சேவா சங்கத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் 100 விதமான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு கொங்கு கலையரங்கில் வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர்  எஸ்.கே‌.எம். மயிலானந்தன் தலைமை தாங்கினார்.  

இதில், பள்ளி மாணவர்கள் உட்பட  300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சூரிய நமஸ்காரம் , கைப் பயிற்சி, கண் பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட 100 விதமான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பேசுகையில், 2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  யோகா செய்வது கடினம் என பலர் நினைத்த நிலையில், வேதாத்திரி மகரிஷி  எளிமைப்படுத்தி கற்றுக் கொடுக்க வழிவகை செய்தார். 20 நாடுகளில் பலருக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் யோகா கற்று தரப்படுவதாகவும் தெரிவித்தார்.