6 new medical colleges in Tamil Nadu

தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 இடங்களில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதே சமயம் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.