Skip to main content

‘மேலும் 50 பேர்’ - வேங்கைவயல் வழக்கில் நீதிபதி சத்யநாராயணன்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

'50 people in the ring of investigation' - Judge Satyanarayan in Vengaivayal case

 

வேங்கை வயல் வழக்கில் மேலும் 50 பேரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாக ஒரு நபர் ஆணைய நீதிபதி சத்யநாராயணன் கூறியுள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் 177 ஆவது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட ஒரு நபர் ஆணைய நீதிபதி சத்யநாராயணன் இரண்டாவது முறையாக புதுக்கோட்டைக்கு சென்றார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார்.

 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிசிஐடியில் தனியாக ஒரு குழு அமைத்து கிட்டத்தட்ட 156 பேரை விசாரணை செய்துள்ளனர். இன்னும் 50 பேரை விசாரணை செய்ய வேண்டும் என்கிறார்கள். டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் இந்த வழக்கில் மிக முக்கியமானது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை என்னால் எதுவும் சொல்ல முடியாது. கால அவகாசம் கொடுக்க முடியாது. கால அவகாசம் கொடுத்தாலே விசாரணை சரியான பாதையில் செல்லாது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்