
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கா் கடந்த 01.04.2016 அன்று முதல் 31.03.2021 வரை தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளார்.
மேலும் 27 கோடியே, 22 லட்சத்து, 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து சோ்த்துள்ளதாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்பைடையில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ் சட்டப்பிரிவுகள் 13(2), 13(1)(ந) ஊழல் தடுப்புச்சட்டம் 1988 மற்றும் 109 மற்றும் சட்டப்பிரிவுகள் 13(1)(டி) 12 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (18.10.2021), அவருக்கு நெருங்கிய நண்பா்கள், உறவினா்கள், தொழில் பங்குதாரா்கள், வீடு மற்றும் அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் என மொத்தம் 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதுக்கோட்டை - 32, திருச்சி - 4, மதுரை - 1, கோயம்பத்தூர் - 2, காஞ்சிபுரம் - 1, செங்கல்பட்டு - 2, சென்னை - 8 ஆகியனவாகும். இந்த சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய் பணம், நகைகள் 4,870 கிராம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவரத்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டு, 19 ஹார்டு டிஸ்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)