Skip to main content

‘குவைத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு?’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
5 Tamils ​​lost their lives in Kuwait? Minister Senji Mastan informed

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
 

5 Tamils ​​lost their lives in Kuwait? Minister Senji Mastan informed

இந்நிலையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீ விபத்து சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கினார். இந்தத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

5 Tamils ​​lost their lives in Kuwait? Minister Senji Mastan informed

அதனைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்திய தூதரகம் மூலம் உயிரிழப்பு நிலவரம் அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை. அதே சமயம் தமிழ்ச் சங்கம் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது. அதன்படி இந்தத் தீ விபத்தில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகிய 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் கூறியுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விக்கிரவாண்டி தொகுதியை தக்க வைத்தது திமுக!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
DMK retained Vikravandi constituency

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக வேட்பாளர் 1,23,195 வாக்குகள் பெற்றுள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 55,026 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,470 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், கிட்டத்தட்ட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் திமுக விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைத்துள்ளாது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்துள்ளார். 

Next Story

விக்கிரவாண்டியில் திமுக முன்னிலை; இனிப்புகள் வழங்கி கொண்டாடிய முதல்வர்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
 mk stalin  celebrated DMK lead in the Vikravandi by-election

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 69,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 30,421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5,566 வாக்குகளும் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.