Skip to main content

அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை; தந்தை, மகன்கள் உள்ளிட்ட 5 பேர் கைது! 

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

5 people, including father and sons arrested government bus driver case


சேலம் அருகே, நிலத் தகராற்றில் அரசுப் பேருந்து ஓட்டுநரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன்கள் உள்ளிட்ட 5  பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.    

 

சேலத்தை அடுத்த பாரப்பட்டி தொட்டியங்காட்டைச் சேர்ந்த குழந்தைவேல் (55). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர் சேலம் எருமாபாளையம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் குழந்தைவேல், தான் புதிதாகக் கட்டி வரும் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளில் கடந்த திங்கள்கிழமை (ஜன.30) ஈடுபட்டிருந்தார்.  

 

அப்போது, உறவினரான சின்னசாமி (62), அவருடைய தம்பி ராஜா (48), சின்னசாமியின் மகன்கள் கணேஷ் (38), பாண்டி என்கிற சுரேஷ் (31),  தினேஷ் (28) ஆகியோர் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தைவேலை மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தைவேலை, அங்கிருந்தவர்கள் மீட்டுச் சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் சின்னசாமி மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தைவேல் சிகிச்சை பலனின்றி ஜன. 31ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மல்லூர் பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.