பவானிஆற்றுப்படுகையில் 48 நாட்கள்யானைகளுக்கு சிறப்புநலவாழ்வுமுகாம் நடத்ததமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற இடத்தில், 48 நாட்கள்யானைகள் சிறப்பு முகாம் நடத்ததமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் உள்ள கோவில்யானைகளுக்கு நடக்கும் இந்தச் சிறப்புமுகாமில்பங்கேற்கும்கோவில்யானைகளுக்கு கரோனாபரிசோதனை செய்யப்படும். அப்படி கரோனாபரிசோதனை செய்யப்பட்டு யானைகளுக்குகரோனாஇல்லை என்ற மருத்துவசான்றிதழைப் பெற்றபிறகே யானைகள் முகாமிற்கு அனுப்பப்படும்.
யானைகளுடன் முகாமிற்கு அனுப்பப்படும் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். நலவாழ்வு முகாமில்பங்குபெறும் யானைகளுக்குஅருகே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. நோயுற்ற, தொற்று நோய் பாதித்தயானைகளை முகாமிற்கு கொண்டுவர தேவையில்லை எனவும்தமிழக அரசு தெரிவித்துள்ளது.