A 4-year-old girl passed away of dengue fever

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ் பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் அபிநிதி(4). செப். 27ம் தேதி டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாததால், அன்று இரவு சிறுமி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.இது ஒருபுறம் இருக்க, சிறுமியின் தம்பி, அக்கா ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவர்களை அணுகி ஆலோசனைபெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.