Skip to main content

நகை கொள்ளை வழக்கில் 4 பேர் கைது...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020
ddd

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவரது பூட்டப்பட்டிருந்த வீட்டில் கடந்த மே மாதம் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

 

இது தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு  போலீசார் தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி புதுச்சேரி மாநிலம் சொறையபட்டு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது கார்மேகம், 25 வயது சுந்தரவடிவேல், வானூர் அடுத்துள்ள நெமிலி என்ற கிராமத்தை சேர்ந்த 26 வயது தினகரன், கொள்ளை நடந்த கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது தஷ்ணாமூர்த்தி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையையும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இந்தக் கொள்ளை வழக்கை திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி கொள்ளையர்களை குறுகிய காலத்தில் கைது செய்துள்ளது குறித்து காவல்துறையினருக்கு அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Jewelery worth Rs 4 crore seized in Madurai

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் வண்டியூர் சுங்கச் சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்ட இந்த நகைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.